மை மியூசிக் கேங் மூலம் பாடல் திறன் கற்ற பியூர் லைப் சொசைட்டி மாணவர்கள் பட்டம் பெற்றனர்

மை மியூசிக் கேங் மூலம் பாடல் திறன் கற்ற பியூர் லைப் சொசைட்டி மாணவர்கள் பட்டம் பெற்றனர்

மை மியூசிக் கேங் என்பது சமுதாயத்தில் பின் தங்கிய சிறார்கள் மகிழ்ச்சியாக இசையை கற்கும் அனுபவத்தையும் அதன் மூலன் அவர்களின் திறன்களை வளர்ப்பதன் மூலம் சமுதாய சீர்கேட்டில் இருந்து காக்கவும், நம்பிக்கையை விதைக்கவும் நான்கு மாத காலம் நடத்தப்படும் ஒரு இலவச பயிற்சி. இசையமைப்பாளர் வினீஷ் குமார் மற்றும் பாடகி மாலினி ஆகியோரின் கூட்டு முயற்சியில் உருவானதே இந்த மை மியூசிக் கேங். இந்த நான்கு மாத கால பயிற்சியின் முடிவில் இந்த மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் பாட வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும். இந்த வகையில் பியூர் லைப் சொசைட்டியை சேர்ந்த சிறுவர்கள் நேற்று 28/05/2019 இந்த பயிற்சியின் முடிவாக பாடினார்கள். இதன் மூலம் இவர்கள் இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள்.

இந்த நிகழ்வில் இசையமைபாளர் பாய் ரேட்ஜ், பாடகி மட்லிடா ரேட்ஜ், பாடகர் ஜேஷுரன் வின்சண்ட், பாடலாசிரியர் பீனிக்ஸ்தாசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் பாடல்களை ரசித்தனர்.