மியா வாய்ப்பை கைப்பற்றினார் ஹனிரோஸ்

மியா வாய்ப்பை கைப்பற்றினார் ஹனிரோஸ்

Kollywood

நவம்பர் 20, கந்தர்வன், முதல் கனவே, சிங்கம் புலி போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஹனி ரோஸ். மலையாள படங்களிலும் நடித்து வந்தார். ‘திருவேந்திரம் லாட்ஜ்’ மலையாள படத்தில் இவரது வேடம் பேசப்பட்டதையடுத்து மளமளவென படங்கள் வந்தன. இந்நிலையில் மேற்படிப்பு படிக்கும் ஆசை வந்தது. ஊட்டியில் பேஷன் டிசைனிங் படிக்க சென்றார் ஹனி. அங்கு கடைபிடிக்கப்பட்ட கடுமையான விதிமுறைகள் அவருக்கு சலிப்வை ஏற்படுத்தியது. உடனே படிப்பை பாதியிலேயே உதறிவிட்டு ஆங்கிலம் இலக்கிய படிப்பில் சேர்ந்தார். விரைவில் அதற்கான தேர்வும் வரவுள்ளது. இந்நிலையில் ஹனிக்கு படங்களில் நடிக்க தொடர்ந்து வாய்ப்பு வருகிறதாம்.

சுரேஷ் கோபி நடிக்கும் மை காட்’ என்ற படத்தில் மியா நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதன் படப்பிடிப்பு தொடங்க தாமதமானது. ஏற்கனவே இன்று நேற்று நாளை படத்தில் நடிக்க மியா ஒப்புக்கொண்டிருந்ததால் மலையாள படத்தில் நடிப்பதில் சிக்கல் எழுந்தது. தற்போது அந்த வேடத்தை ஹனி ரோஸ் கைப்பற்றி இருக்கிறார். பல்கலைகழக தேர்வு நெருங்கி வருகிறது. ஆனால் சினிமாவிலும் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் இம்முறை ஹனிரோஸ தேர்வு எழுதுவது சந்தேகம்தான்’ என்று ஹனி ரோஸ் தோழிகள் கூறி உள்ளனர்.