பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைய வாய்ப்பு

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைய வாய்ப்பு

petrol

நவம்பர் 8, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் சரிவடைந்ததை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச நிலவரத்தை பொருத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை நிர்ணையக்கும் அதிகாரம் பொதுறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் குறைந்ததை அடுத்து கடந்த 31-ம் தேதி நள்ளிரவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. விலை குறைப்பு பின்னர் 7 நாட்களில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் குறைந்துள்ளது.

31-ம் தேதி 85 டாலராக இருந்த பிப்பாய் எண்ணெய் விலை தற்போது மேலும் 5 டாலர் குறைந்துள்ளது. இதன் எதிரோலியாக பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டது. விலை குறைப்பு அறிவிப்பு வரும் 15-ம் தேதி வாக்கில் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.