புதிய தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து

புதிய தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து

2

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஏப்ரல் 27-ம் தேதி பதவியேற்ற ஆர்.எம்.லோதா நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து புதிய தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து நேற்று பதவியேற்றார். இவர், 2015-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி வரை தலைமை நீதிபதி யாக பதவி வகிக்க உள்ளார்.அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.