நாடு அரசுக்கு சொந்தமானதல்ல;மக்களுக்கு சொந்தமானது-ரேடியோவில் மோடி உரை

நாடு அரசுக்கு சொந்தமானதல்ல;மக்களுக்கு சொந்தமானது-ரேடியோவில் மோடி உரை

Narendra-Modi

பாரதப்பிரதமராக உள்ள நரேந்திர மோடி இன்று ரேடியோவில் முதன் முறையாக உரையாற்றினார். அப்போது ரேடியோவில் உரையாற்றுவதன் மூலம் ஏழை மக்களை நான் தொடர்பு கொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று கூறினார். பின்னர் அவர் பேசியதாவது; 

எனது வலிமை நாட்டின் விவசாயிகளான உங்களை பொறுத்து தான் உள்ளது. இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நாம் இணைந்து செயல்படுவோம். நீங்கள் என்னுடன் ஏதாவது பகிர்ந்துகொள்ள விரும்பினால் உங்கள் யோசனைகளை mygov.in என்ற இணையதளத்தின் மூலம் தொடர்பு கொள்ளுங்கள். 

இந்த நாடு அரசுக்கு சொந்தமானதல்ல. இது மக்களுக்கு சொந்தமான நாடு. மகாத்மா காந்தியை நீங்கள் பின்பற்றுங்கள். கதர் ஆடையை வாங்குங்கள். எனக்கு வரும் மின்னஞ்சலில் பெரும்பாலானவர்கள், சிறு வயதினருக்கு திறமை வளர்ச்சி குறித்த பயிற்சியை வழங்கவேண்டும் என்று யோசனை தெரிவித்துள்ளனர். இது மிக நல்ல யோசனையாகும். அது போல் பாலிதீன் பைகளை ஓழித்து குப்பை கூடைகளை பயன்படுத்தவேண்டும் என்றும் பலர் மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். 

இனி மாதத்திற்கு இரு முறையாவது ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களை தொடர்பு கொள்வேன் என்று மோடி பேசினார்.