நடிப்புக்கு ஒரு மாதம் ஓய்வு :தமன்னா அதிரடி முடிவு

நடிப்புக்கு ஒரு மாதம் ஓய்வு :தமன்னா அதிரடி முடிவு

Tammana_Stills_03

அக்டோபர், 15 நடிப்புக்கு தமன்னா ஒரு மாதம் ஓய்வுவிட்டார்.கோடை சீசன் வந்ததும் நடிகர், நடிகைகள் மாதக்கணக்கில் பாய்பிரண்ட் மற்றும் குடும்பத்துடன் வெளிநாடு டூர் புறப்படுவது சகஜமாகிவிட்டது. தமன்னாவை பொறுத்தவரை மழைக்காலத்தில் ஒரு மாதம் ஓய்வு எடுக்க எண்ணி உள்ளார். இதுபற்றி விசாரித்தபோது, கடந்த பல மாதங்களாக தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார். இதனால் குடும்ப மற்றும் உறவினர்கள் விழா பலவற்றில் பங்கேற்க முடியாமலும், தோழிகள் யாரையும் சந்திக்க முடியாமலும் இருந்தார். இதுபற்றி பலர் கேட்ட வண்ணம் இருந்தனர். இதையடுத்து இந்த அக்டோபர் மாதம் முழுவதும் படப்பிடிப்பில் பங்கேற்காமல் ஓய்வு எடுத்துக்கொண்டு குடும்பம் மற்றும் உறவினர்கள், தோழிகளை அழைத்து விருந்து கொடுக்கவும் அவர்களது குடும்ப நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவும் முடிவு செய்துள்ளார். மேலும் விளம்பர படங்கள் சிலவற்றிலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அதற்காக போட்டோ செஷனில் பங்கேற்கிறார். சமீபத்திலும் இதுபோல் ஒரு போட்டோ செஷன் மும்பையில் நடந்தபோது பங்கேற்றார். அடுத்து நவம்பர் மாதம் முதல் தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்கிறார் என்றனர்.