தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் விஷால் அணி வெற்றி

Online-Tamil-News-Malaysia

Online-Tamil-News-Malaysia

அக்டோபர் 19, நடிகர் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் சரத்குமார், விஷால் அணிகள் மோதுகின்றன. சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் மேல்நிலைப்பள்ளியில் ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.  5 மணிக்கு வாக்கு பதிவு முடிந்தது. வாக்கு எண்ணிக்கை 5.30மணிக்கு துவங்கியது. இன்று அதிகாலை 4 மணியளவில்தான் முழுமையாக முடிவடைந்துள்ளது. 29 நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட தேர்தலில் விஷால் அணியை சேர்ந்த 25 பேர் வெற்றி பெற்றனர். சரத்குமார் அணியில் 4 பேர் மட்டும் வெற்றி பெற்றனர். தேர்தலில் ஓட்டுபோட தகுதி உள்ளவர்களாக 3,139 பேர் உள்ளனர். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நாடக நடிகர்-நடிகைகள்.