தலையை விட பெரிதாக உள்ள கைகளால் அவதிப்படும் சிறுவன்

தலையை விட பெரிதாக உள்ள கைகளால் அவதிப்படும் சிறுவன்

Kid-Big-hands_1416247i

இந்தியாவை சேர்ந்த சிறுவனான எட்டு வயது சிறுவனான கலீமுக்கு அவனது தலையை விட கைகள் பெரிதாக உள்ளது வருத்தத்தை தருகிறது. மருத்துவத்துறையோ அவனது கைகளின் வளர்ச்சியை பார்த்து குழம்பிப்போய் கிடக்கிறது.

பிறக்கும்போதே இயல்பான குழந்தைகளின் விரல்களை விட இரு மடங்கு பெரிதாக கலீமின் விரல்கள் இருந்துள்ளது. தொடர்ந்து நாளுக்கு நாள் விரல்களின் வளர்ச்சி மேலும் மேலும் பெரிதானது. அவனது உள்ளங்கையிலிருந்து நடுவிரலின் முடிவு வரை கணக்கிட்டால் 13 இஞ்ச் அளவுக்கு அவனது கைகள் வளர்ச்சியடைந்துள்ளது தெரிகிறது. மிகவும் அபரிதமான கைகளின் வளர்ச்சியால் இச்சிறுவன் ஷு லேஸ் கட்டுவதற்கும், உடைகளை அணிந்து கொள்வதற்கும் மற்ற செயல்களை செய்வதற்கும் சிரமப்படவேண்டியுள்ளது.

தன்னை பார்த்து மற்றவர்கள் பயப்படுவதால் தனது வாழ்க்கையே தனிமையில் கழிவதாக சிறுவன் கலீம் சோகத்துடன் கூறியுள்ளான். மாதம் ஒன்றிற்கு 1500 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் கலீமின் பெற்றோர் தங்கள் சக்திக்கு ஏற்ற வகையில் அவனது சிகிச்சைக்கு செலவு செய்துவருகின்றனர். ஆனால் அவனை பரிசோதிக்கும் மருத்துவர்களோ குழம்பிப்போய்விடுவதாக அவனது பெற்றோர்கள் கூறுகின்றனர்.