தமிழகத்தில் தனியார் பால், தயிர் விலை ரூ.2 குறைப்பு

தமிழகத்தில் தனியார் பால், தயிர் விலை ரூ.2 குறைப்பு

arokya-250x250

ஜூலை 7, தமிழகத்தில் 5 தனியார் பால் நிறுவனங்கள் பால் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் 4 நிறுவனங்கள் ஆந்திராவை சேர்ந்தவை. ஆரோக்கியா பால் மட்டும் தமிழகத்தில் இருந்து வினியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆரோக்கியா நிறுவனம் லிட்டருக்கு ரூ.2 விலையை திடீரென குறைத்துள்ளது. ரூ.42–ல் இருந்து ரூ.40 ஆகவும், சமன்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு ரூ.46–ல் இருந்து ரூ.44 ஆகவும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் லிட்டருக்கு ரூ.50–ல் இருந்து ரூ.48 ஆகவும் குறைந்துள்ளது.