செவ்வாய் கிரக பயணத்துக்கு 3 இந்தியர்கள் தேர்வு

செவ்வாய் கிரக பயணத்துக்கு 3 இந்தியர்கள் தேர்வு

mars_in_water

பிப்ரவரி 17, சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாயில், உயிர்கள் வாழ ஏற்ற சூழல் நிலவுகிறதா? என விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்தியாவின் மங்கள்யானும் இந்த தேடலில்தான் தீவிரமாக இறங்கியுள்ளது. இது ஒருபுறமிருக்க, அங்கு மனிதர்களை குடியேற்றும் திட்டத்தை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அதன்படி சுமார் 40 பேரை கொண்ட ஒரு காலனியை அங்கு நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்கான அறிவிப்பு வெளியான உடனே, உலகம் முழுவதிலும் இருந்து 2 லட்சத்து 2 ஆயிரத்து 586 பேர் செவ்வாய் பயண திட்டத்துக்கு விண்ணப்பித்தனர். இதில் ஏராளமான இந்தியர்களும் அடக்கம்.

இது ஒரு வழி பயணம் ஆகும். செவ்வாய் கிரகத்துக்கு பத்திரமாக போய் சேர்ந்தால் அங்கு இருந்து திரும்பி வர முடியாது.

இந்த பட்டியலில் புளோரிடாவில் ஆய்வுக்கல்வி பயின்று வரும் தரண்ஜீத் சிங் (வயது 29), துபாயில் வசித்து வரும் ரித்திகா சிங் (29), கேரளாவை சேர்ந்த இளம்பெண் சாரதா பிரசாத் (19) ஆகிய 3 இந்தியர்களும் இடம் பெற்றுள்ளனர்.