சீனாவுக்கு முதல் முறையாக செல்லும் இங்கிலாந்து இளவரசர்

சீனாவுக்கு முதல் முறையாக செல்லும் இங்கிலாந்து இளவரசர்

timthumb

நவம்பர் 28, இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் வில்லியம்ஸ் முதல் முறையாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சீனாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முன் பிப்ரவரி இறுதியில் மூன்று நாள் பயணமாக ஜப்பான் செல்கிறார் வில்லியம்ஸ். ஆனால், தனது கர்ப்பிணி மனைவியை இந்த சுற்றுப்பயணத்தின் போது இளவரசர் வில்லியம்ஸ் அழைத்து செல்லமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முப்பது ஆண்டுகளில் இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் சீனாவுக்கு செல்வது இதுதான் முதல் முறையாகும். 1986 ஆம் ஆண்டு இளவரசியும் அவரது கணவரும் இளவரசருமான பிலிப் சென்றனர். அதன்பிறகு, இப்போதுதான் அரச குடும்பத்தில் இருந்து ஒருவர் சீனாவுக்கு செல்கிறார்.