சார்ஜாவில் கொடூர விபத்து: இருவர் தலை துண்டானது-இந்தியர் உள்பட 4 பேர் பலி

சார்ஜாவில் கொடூர விபத்து: இருவர் தலை துண்டானது-இந்தியர் உள்பட 4 பேர் பலி

accident

அக்டோபர் 29,  சார்ஜாவின் விரைவு நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை நிகழ்ந்த கொடூர விபத்தில் ஒரு இந்தியர் உள்பட 4 பேர் பலியாகினர். சார்ஜா ரானுவத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரி, தனது ராணுவச் சீருடையை சலவைக்கு போட்டிருந்ததை மறந்துப் போய் தனது அன்றாட அலுவல்களில் மூழ்கிப் போனார். உயரதிகாரிகளின் அவசர கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து, அந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு அவர் தயாரானபோது, மிடுக்கு கலையாத சீருடைகள் தன்னிடம் இல்லாததை கண்டு திடுக்கிட்ட அவர், சலவைக்கு துணி போட்ட கடைக்கு போன் செய்தார். நள்ளிரவு சுமார் 2 மணி ஆனதால், கடை மூடப்பட்டிருக்கவே, அதில் வேலை செய்யும் ஊழியர்களை தேடிச் சென்ற அவர், இருவரை தனது காரில் ஏற்றிக் கொண்டு வேகமாக ஓட்டும்படி டிரைவரிடம் கூறினார். அவசரமாக காரை ஓட்டிய டிரைவர், சார்ஜா விமான நிலையம் அருகே சாலையோரமாக பழுதாகி நின்றிருந்த லாரியை கவனிக்கத் தவறிய அதே வேளையில், அந்த லாரியின் பின்புறத்தில் பயங்கர சத்தத்துடன் மோதிய கார், இரண்டு துண்டங்களாகியது. முன் இருக்கையில் அமர்ந்திருந்த டிரைவர் உள்பட இருவர் தலை துண்டிக்கப்பட்டு, கண்ணாடி வழியாக வெளியே தூக்கி வீசப்பட்டனர். ராணுவ அதிகாரி உள்பட பின் இருக்கையில் அமர்ந்திருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததையடுத்து, இந்த விபத்தில் மொத்தம் 4 பேர் பலியாகினர்.