கைவசம் படம் இல்லை அசின் புது பிளான்

கைவசம் படம் இல்லை அசின் புது பிளான்

actressas

அக்டோபர் 25, அசினுக்கு கைவசம்  படங்கள் இல்லாததால் புது திட்டம் வைத்திருக்கிறார்.கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்கு பறந்தார் அசின். போனவேகத்தில் அமீர்கான், சல்மான்கான் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டார். கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்ததால் பட வாய்ப்புகள் குறைந்தன. கடந்த 2 வருடமாக புதிய படங்கள் எதுவும் தேடி வரவில்லை. ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்த ஒன்றிரண்டு படங்களும் நடித்து முடித்திருக்கிறார். இதற்கிடையில் கோலிவுட்டில்  புது ஹீரோயின்கள் மார்க்கெட் ஓங்கியது. இதனால் அசினை தேடி வாய்ப்புகளும் செல்லவில்லை. வீட்டில் முடங்கி கிடக்க மனமில்லாமல் வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார். இதற்கிடையில் அமெரிக்கா வாலிபர் ஒருவரை அசின் காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியானது. அதை அசின் தரப்பில் மறுத்திருந்தனர். வரும் 26ம் தேதி அசின் பிறந்த நாள். பாலிவுட்டில் இருந்தால் பார்ட்டி தரவேண்டும், திருமணம், புதிய படங்களில் நடிப்பதுபற்றி என சரமாரியாக கேள்வி என பலமுனை தாக்குதலிருந்து விடுபட முடிவு செய்தார்.  இதையடுத்து பிறந்த தினத்தை வெளிநாட்டில் கொண்டாட முடிவு செய்தார். கடந்த செவ்வாய்கிழமையே அவர் அமெரிக்கா பறந்தார். நியூயார்க்கில் 3 நாள் கழித்துவிட்டு பிறந்த நாளன்று பிரான்ஸ் பறக்கிறார். பாரிஸில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுகிறார். அவருடன் பாய் பிரண்டும் செல்கிறாரா என்பதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை.