கேமரூன் நாட்டின் எல்லையில் 80 பேரை கடத்தி சென்றுவிட்டனர் நைஜீரியா தீவிரவாதிகள்

கேமரூன் நாட்டின் எல்லையில் 80 பேரை கடத்தி சென்றுவிட்டனர் நைஜீரியா தீவிரவாதிகள்

Tehrik-e-taliban-620x465

ஜனவரி 19, நைஜீரியாவில் ‘போகோஹராம்’ தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர். பொதுமக்களை கொன்று குவிக்கின்றனர். மாணவ– மாணவிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தி செல்கின்றனர். தற்போது அண்டை நாடான கேமரூனிலும் அட்டகாசத்தை அரங்கேற்ற தொடங்கியுள்ளனர்.

நைஜீரியாவில் கேமரூன் நாட்டின் எல்லையில் அதாவது வடகிழக்கு பகுதியில் சில நகரங்கள் மற்றும் கிராமங்களை தங்கள் கட்டுப்பாட்டில் போகோஹராம் தீவிரவாதிகள் வைத்துள்ளனர். இது கேமரூன் நாட்டுக்கு பெரும் இடையூறாக உள்ளது. எனவே அங்கு ராணுவமும், போலீசாரும் அவர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் நேற்று தங்கள் கட்டுப்பாட்டு பகுதியில் எல்லையில் உள்ள கேமரூன் கிராமங்களுக்குள் புகுந்தனர். அங்கு வீடுகளுக்கு தீ வைத்தனர். அதில் 80 வீடுகள் எரிந்து சாம்பலாயின.

பின்னர் அங்கிருந்து 80 பேரை கடத்தி சென்றுவிட்டனர். அவர்களில் 30 பேர் குழந்தைகள். 80 பேர் பெரியவர்கள். கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள்.

கடத்தப்பட்டவர்களில் தப்பிக்க முயன்ற 4 பேரை ‘போகோஹராம்’ தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

இத்தகவலை கேமரூன் தகவல் தொடர்பு மந்திரி இஸ் சா ஹிரோமா பகாரி உறுதி செய்துள்ளார். அதைத்தொடர்ந்து அப்பகுதியில் கேமரூன் ஆயிரக் கணக்கான ராணுவ வீரர்களை பாதுகாப்புக்காக குவித்துள்ளது.