கிளாமர் இல்லாத வேடத்தில் நடிக்க மாட்டேன் காஜல்

கிளாமர் இல்லாத வேடத்தில் நடிக்க மாட்டேன் காஜல்

Kajal-Agarwal-Unseen-Photos-26

மே 15, தமிழில் மாரி, பாயும் புலி, மர்ம மனிதன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். முன்னதாக தெலுங்கு படங்களில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தவருக்கு சமீபகாலமாக புதுபடம் எதுவும் வரவில்லை. கடைசியாக ‘டெம்பர்’ தெலுங்கு படத்தில் நடித்ததோடு சரி. அதன்பிறகு டோலிவுட்டில் அவரை யாரும் அழைக்கவில்லை. வாய்ப்புக்காக காத்திருக்காமல் கால்ஷீட்டை தமிழ் படங்களுக்கு ஒதுக்கிவிட்டார். மார்க்கெட் டல்லடித்துப்போனதற்கு காரணம் என்ன? என்று கேட்டபோது அவர் கூறியது: டோலிவுட்டில் பட வாய்ப்புகள் குறைந்திருந்தாலும் கோலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வருகிறேன். ஒரு சில படங்களில் நெகடிவ் கேரக்டரில் நடிக்க கேட்கிறார்கள். வில்லி வேடத்தில் ஒருபோதும் நடிக்க மாட்டேன். அதேபோல் கவர்ச்சி குறைவான வேடங்களில் நடிக்கவும் ஒப்புக்கொள்ள மாட்டேன். என்னை கிளாமர் வேடங்களிலேயே ரசிகர்கள் பார்க்க விரும்புகிறார்கள். அப்படி இருக்கும்போது நான் ஏன் கிளாமர் குறைவான படங்களில் நடிக்க வேண்டும் என்றார்.