காஷ்மீர் பிரச்னையில் தலையிட முடியாது:பாகிஸ்தானுக்கு ஐ.நா பதில்

காஷ்மீர் பிரச்னையில் தலையிட முடியாது:பாகிஸ்தானுக்கு ஐ.நா பதில்

Hilal War Only Kashmir

அக்டோபர், 15 காஷ்மீர் பிரச்னையில் தலையிட வேண்டும் என பாகிஸ்தான் முன்வைத்த கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை நிராகரித்துள்ளது. இது மோடி அரசுக்கு கிடைத்த வெற்றி என பா.ஜ கருத்து தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் சமீப காலமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் காஷ்மீர் பிரச்னையை ஐ.நா சபையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த மாதம் எழுப்பினார். இதையடுத்து பாகிஸ்தானுடனான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் இந்தியா நிறுத்தியது.

‘‘காஷ்மீர் மக்களின் எண்ணப்படி, காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு என்ற கொள்கையை அமல்படுத்தும் விஷயத்தில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும்’’ என பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் ஆசிஸ், ஐ.நா.பொது செயலாளர் பான் கி மூனுக்கு சில நாட்களுக்கு முன் கடிதம் அனுப்பினார். இது தொடர்பாக பான் கி மூனின் செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ‘‘காஷ்மீர் பிரச்னையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என பான் கி மூன் தெரிவித்துள்ளார்’’ என பர்ஹான் கூறினார்.