கலைநிகழ்ச்சிகளில்ஆண்ட்ரியா, ராய் லட்சுமி விசாகா சிங், ஸ்ரேயா

கலைநிகழ்ச்சிகளில்ஆண்ட்ரியா, ராய் லட்சுமி விசாகா சிங், ஸ்ரேயா

shriya

‘சன் குடும்பம் விருதுகள்’ வழங்கும் விழாவில் சின்னத்திரை கலைஞர்கள் தவிர பெரிய திரை நட்சத்திரங்களும் பங்கேற்கிறார்கள்.மகாபலிபுரத்தில் நடக்கும் ‘சன் குடும்பம் விருதுகள்’ வழங்கும் விழாவில் சின்னத்திரை கலைஞர்களின் ஆடல், பாடல் உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்காக அவர்கள் இப்போது ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள் தவிர, சினிமா நடிகர், நடிகைகள், இயக்குனர்களும் இவ்விருது விழாவில் பங்கேற்கிறார்கள். நடிகைகள் ஆண்ட்ரியா, பூஜா, ராய் லட்சுமி, விசாகா சிங், ஸ்ரேயா, பூர்ணா, நடிகர் சிவா, சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் பங்குபெறும் நிகழ்ச்சிகள் விழாவில் நடைபெற இருக்கின்றன. ஸ்ரேயா, பூர்ணா, ராய்லட்சுமி ஆகியோர் ஹிட் பாடல்களுக்கு நடனம் ஆடுகின்றனர். ஆண்ட்ரியா சில பாடல்களை பாடுகிறார். நடிகர் மனோபாலா, மயில்சாமி, நளினி, மதுமிதா, மதுரை முத்து ஆகியோரின் கலக்கல் காமெடி நிகழ்ச்சிகளும் விழாவில் நடைபெறுகிறது. நிகழ்ச்சிகளை சின்னத்திரை நடிகர் தீபக்கும் நடிகை ஐஸ்வர்யாவும் தொகுத்து வழங்குகிறார்கள்.