கருப்பு பணம் பற்றிய தகவல்களை அறிவிக்க இன்று கடைசி நாள்

கருப்பு பணம் பற்றிய தகவல்களை அறிவிக்க இன்று கடைசி நாள்

black-money

செப்டம்பர் 30, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு வெளிநாடுகளில் கருப்பு பணம், சொத்து குவிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்பாக வெளியிடப்படாத வெளிநாட்டு வருமானம், சொத்துகள் புதிய வரி விதிப்பு சட்டம்-2015 என்ற பெயரில் ஒரு சட்டமும் இயற்றப்பட்டு, கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் அது அமலுக்கு வந்துள்ளது.

செப்டம்பர் 30-ந் தேதிக்குள் தாமாக முன்வந்து வெளிநாட்டு சொத்துகள், வருமானம் பற்றிய தகவல்களை அளிப்பவர்களுக்கு, 60 சதவீத வரியும், அபராதமும் விதிக்கப்படும். சிறைத்தண்டனை கிடையாது. அவர்கள் வரியையும், அபராதத்தையும் செலுத்துவதற்கு டிசம்பர் 31-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்படும். இந்த 3 மாத கால அவகாசம் இன்று நள்ளிரவு முடிவுக்கு வருகிறது. இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என மத்திய அரசு தரப்பில் உறுதிபட அறிவிக்கப்பட்டுள்ளது.