ஏமனில் ஒரே நாளில் 140 பேர் பலி

ஏமனில் ஒரே நாளில் 140 பேர் பலி

aman

ஏப்ரல் 8, ஏமன் நாட்டில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வரும் வேளையில் நேற்று ஒரே நாளில் 140 பேர் பரிதாபமாக உயரிழந்தனர். ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஈரான் ஆதரவு பெற்ற ஹுதி கிளர்ச்சியாளர்கள் ஆயுத போராட்டம் நடத்தி வருகிறார்கள். உயிருக்கு பயந்து ஏமன் அதிபர் சவுதி அரேபியா தப்பி விட்டார். ஏமன் ராணுவத்துக்கு துணையாக சவுதி போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்கள் மீது கடந்த ஒரு வாரமாக குண்டுகளை வீசி வருகிறது. இந்த தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் மட்டும் அல்லாது பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏமனில் பணியாற்றி வரும் வெளிநாட்டவர்கள் கடல் மற்றும் விமானம் வழியாக சொந்த நாடு திரும்பி வருகின்றனர்.