எபோலா நோய்க்கு இதுவரை 1031 பேர் பலி

எபோலா நோய்க்கு இதுவரை 1031 பேர் பலி

Ebola-story

ஆப்பிரிக்காவில் பரவி வரும் எபோலா வைரஸ் கிருமி தாக்குதலுக்கு இதுவரை 1031 பேர் பலியாகியுள்ளதாக WHO எனும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்காவின் கினியா, லைபீரியா, சீயெரா லியோன் ஆகிய நாடுகளில் இதுவரை எபோலா நோய் பரவியுள்ளது. அதேவேளையில் நைஜீரியாவிலும் பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதுவரை 1848 பேருக்கு எபோலா வைரஸ் நோய் தொற்று கண்டுள்ளது, பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளவர்களுக்குக் காய்ச்சல், வாந்தி, மற்றும் ரத்தக் கசிவு போன்ற அறிகுறிகள் தெரியும். குணப்படுத்துவதற்கான வாய்ப்பு 90 விழுக்காடு குறைவாகும்.