இன்று நடக்கிறது உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா

இன்று நடக்கிறது உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா

2015_Cricket_World_Cup_Logo.svg

பிப்ரவரி 12, 11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்துகின்றன. போட்டி தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தொடக்க விழா இன்று இரண்டு நகரங்களில் கோலாகலமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலும், நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரிலும் உள்ளூர் நேரப்படி இரவில் தொடக்க விழா நடக்க உள்ளது. இதில் கிரிக்கெட் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கண்கவர் நிகழ்ச்சிகள், கிரிக்கெட் பிரபலங்களின் பேச்சு, காதை பிளக்கும் இசைமழை, வண்ணமயமான வாணவேடிக்கை உள்ளிட்டவை இடம் பெறும்.

இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணியில் இருந்து தொடக்க விழாவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பார்க்கலாம்.