இந்தோனேசியாவில் சுனாமியால் பாதிக்காத மசூதியில் 10-ம் ஆண்டு சிறப்பு தொழுகை

இந்தோனேசியாவில் சுனாமியால் பாதிக்காத மசூதியில் 10-ம் ஆண்டு சிறப்பு தொழுகை

sunami

டிசம்பர் 27, 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பெரும் நில நடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டது. சுனாமி பேரலைகள் இந்தோனேசியாவின் பண்டா ஏஸ் மாகாணம் உள்பட இலங்கை, இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளையும் கடுமையாக தாக்கி பெருத்த உயிர்ச்சேதத்தையும், பொருட்சேதத்தையும் ஏற்படுத்தியது. இதில் 2 லட்சத்து 26 ஆயிரம் பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பண்டா ஏஸ் மாகாணத்தில் மட்டும் 1 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியானார்கள்.

எனினும், பண்டா ஏஸ் நகரின் கடற்கரையோரம் 135 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பைத்தூர்ரகுமான் என்ற பெரிய மசூதிக்கு மட்டும் சுனாமியால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

சுனாமியால் உயிரிழந்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும் பண்டா ஏஸ் நகர மக்கள் இந்த மசூதியில் சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர். நேற்று 10-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இந்த மசூதியில் இமாம் அஸ்மான் இஸ்மாயில் தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் இந்த சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.