அமெரிக்க வாழ் இந்தியர் ஓட்டலில் கேட்பாரற்று கிடந்த பையில் ரூ.61 லட்சம்

அமெரிக்க வாழ் இந்தியர் ஓட்டலில் கேட்பாரற்று கிடந்த பையில் ரூ.61 லட்சம்

US511

நவம்பர் 29, அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் பர்கர் கிங் ரெஸ்டாரண்ட் என்ற பெயரில், இந்தியரான அல்டாப் சாஸ் என்பவர் ஓட்டல் ஒன்று நடத்தி வருகிறார். அந்த ஓட்டலில், கடந்த புதன்கிழமை நாற்காலி ஒன்றில் யாரோ ஒருவர் முதுகில் அணிகிற நீல நிற பை ஒன்றை விட்டுச்சென்றுவிட்டார். அந்த பையை ஓட்டல் உரிமையாளர் அல்டாப் சாஸ் எடுத்து வைத்திருந்தார். யாரும் அதை கேட்டு வரவில்லை.

அன்று அவரது பிறந்த நாள் என்பதால் சீக்கிரமாக ஓட்டலை மூடி விட்டு வீட்டுக்கு போக அல்டாப் சாஸ் எண்ணினார். அப்போதுதான் கேட்பாரற்று கிடந்த அந்த பையில் என்னதான் இருக்கிறது என்ற ஆர்வத்தில் ”ஜிப்”பை திறந்து பார்த்தார். அதில் டாலர் நோட்டு 10 கட்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் மொத்த மதிப்பு 1 லட்சம் டாலர் (சுமார் ரூ.61 லட்சம்). அதைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக போலீசாரை வரவழைத்து ஒப்படைத்தார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, நான் 26 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவுக்கு வந்தேன். வியர்வை சிந்தி சம்பாதிக்க வேண்டும். வியர்வை சிந்தாமல் வருகிற பணம், நமது பணம் அல்ல. நான் பணத்தை பார்த்து சபலப்பட மாட்டேன்” என்றார். அந்த பைக்கு சொந்தக்காரரை இப்போது போலீசார் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.