அமெரிக்க வான்வழி தாக்குதலில் அல்கொய்தாவின் முக்கிய தலைவர் பலி

அமெரிக்க வான்வழி தாக்குதலில் அல்கொய்தாவின் முக்கிய தலைவர் பலி

airf

நவம்பர் 6, ஏமன் நாட்டில் அல்கொய்தா தீவிரவாதிகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஏமன் நாட்டின் அல்பாய்டா மாகாணத்தில் உள்ளூர் தீவிரவாத குழுவான அன்சார் அல் சஹாரியாவின் தலைவராக இருந்த நபில் அல் டஹாப் மற்றும் 4 அல்கொய்தா உறுப்பினர்களும் கொல்லப்பட்டதாக அந்த பகுதியை சேர்ந்த பழங்குடியினர் தெரிவித்தனர். கொல்லப்பட்ட அல்கொய்தா தீவிரவாதிகள் 4 பேரில் அமெரிக்காவால் தேடப்பட்டு வந்த ஷாவ்கி அல் பதானி என்பவர் அரேபிய தீபகற்பத்தில் முக்கியமான தலைவராக விளங்கியவர்.

அமெரிக்க அரசு பதானியை சர்வதேச தீவிரவாதி என்றும் அவர் மீது 2 சதிச்செயல்களில் தொடர்பு உள்ளது என்றும் கூறியிருந்தது. சானாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது நடத்திய தாக்குதல் மற்றும் ஏமன் தலைநகரில் 2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதல் (இதில் 100க்கு மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்) ஆகியவைகளில் பதானிக்கு தொடர்பு உள்ளது.

கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அரசின் இணையதளத்தில், பதானி பற்றி தகவல் தருபவர்களுக்கு ஏமன் அரசு இந்திய மதிப்பில் சுமார் ரூ.60 லட்சம் வெகுமதி வழங்குவதாக அறிவித்துள்ளது என்று கூறப்பட்டு இருந்தது. ஏமன் அரசும் பதானியை அல்கொய்தாவில் இணைந்துள்ள மிக பயங்கரமான தீவிரவாதி என்று அறிவித்து இருந்தது.