அமெரிக்காவுக்கான புதிய தூதராக அருண் சிங்கை நியமிக்க மத்தியரசு நடவடிக்கை

அமெரிக்காவுக்கான புதிய தூதராக அருண் சிங்கை நியமிக்க மத்தியரசு நடவடிக்கை

US-India

மார்ச் 2, அமெரிக்காவில் இந்திய தூதராக இருந்த ஜெய் சங்கர் சுஜாதா சிங்கிற்கு பதிலாக திடீர் என வெளியுறவு செயலாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவரது இடத்தில் தற்போது பிரான்சில் இந்திய தூதராக இருக்கும் அருண் சிங் நியமிக்கப்படுவார் என செய்தி வெளியாகி உள்ளது. அமெரிக்கா தூதராக நியமிக்கப்பட்டாலும் வரும் ஏப்ரலில் பிரதமர் மோடி பிரான்ஸ் செல்ல உள்ளதால் அதன் பின்னரே அருண் சிங் வாஷிங்டன்னில் பொறுப்பேர்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.