ஆகஸ்டு 31, சென்னையில் ஆலந்தூர் கோயம்பேடு இடையே கடந்த ஜூன் மாதம் தொடங்கிய மெட்ரோ ரெயில் தற்போது 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டும் செல்கிறது. சொகுசு ரெயிலில் ஏறி பயணம் செய்ய சென்னை வாசிகள் மிகவும் ஆர்வம் காட்டினர். பின்னர் படிப்படியாக கூட்டம் குறையத் தொடங்கியது.
இந்த சலுகை 12 முறை, 50 முறை, 100 முறை என 3 சலுகை கட்டண அட்டைகள் வழங்கப்பட உள்ளன. 12 முறை பயண அட்டை 7 நாட்களுக்கும், 50 முறை பயண அட்டை 30 நாட்களுக்கும், 100 முறை பயண அட்டை 60 நாட்களுக்கும் செல்லுபடியாகும். இந்த பயண சலுகை அட்டையை பெற திரும்ப பெறத்தக்க முன்பணம் ரூ.50 செலுத்த வேண்டும்.