ஆகஸ்டு 14, தனது 69-வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடும் பாகிஸ்தான் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்துக்களோடு முஸ்லிம் சமுதாய மக்கள் சேர்ந்து வாழ்வது சாத்தியப்படாது. முஸ்லிம்களுக்கு தனிநாடு பிரித்து தரப்பட வேண்டும் என மகாத்மா காந்தியுடன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட முகமது அலி ஜின்னா மிகவும் வலியுறுத்தினார். நமது நாட்டின் பல பகுதிகள் தாரைவார்க்கப்பட்டு பாகிஸ்தான் என்ற புதிய நாடு உதயமானது.