டாமன்சாரா, 26 அக்டோபர் 2026 : மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டு நிறுவனமான FINAS, திரைப்படம் மற்றும் படைப்புத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு ஆறு வகையான நிதி உதவித் திட்டங்களுக்கான விண்ணப்பங்களை நவம்பர் 16, 2026 முதல் திறக்கவுள்ளது.
இத்திட்டங்களில் சர்வதேச இணைத் தயாரிப்பு திரைப்படங்கள் மற்றும் அனிமேஷன், புதிய திரைப்படத் தயாரிப்பாளர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், குறும்படங்கள், மூத்த கலைஞர்களுக்கான திரைப்படங்கள் மற்றும் தேசியப் பொது சேவை விளம்பரங்கள் ஆகியவை அடங்கும்.
விண்ணப்பங்களை FINAS-இன் படைப்புத் தொழில்துறை மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பான SPPIK வழியாகச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப நடைமுறைகள், நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டி காணொளிகள் FINAS-இன் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு : https://sppik.finas.my








