ஆகஸ்டு 13, ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமைகளில் தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவு தனது தலைமையகத்தில் மக்கள் சந்திப்பு நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே. வருகின்ற செவ்வாய்கிழமை (18-8-2015) நடக்கவிருக்கின்ற மக்கள் சந்திப்பில் ம.இ.கா இளைஞர் பிரிவு பொது பல்கலைக்கழக மறுவிண்ணப்பம் செய்திருக்கும் மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.
தங்கள் விண்ணப்பித்த துறைக் கிடைக்காமல், வேறு துறைக் கிடைத்த மாணவர்களும், அறவே எந்த ஒரு இடமும் கிடைக்காத மாணவர்களுக்கு மட்டுமே இதில் கலந்துக்கொள்ள அழைக்கப்படுகின்றனர். பல்கலைக்கழக மாற்றம் கோரும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட மாட்டாது. காரணம் ம.இ.கா இளைஞர் பிரிவினரின் நோக்கம் எதுவெனில், முடிந்த வரையில் அனைத்து தகுதியும் இருக்கும் மாணவர்கள் தங்கள் விண்ணப்பித்த துறையில் படிக்க வேண்டும் என்பதும், கூடுமான வரையில் அனைவரும் பல்கலைக்கழக பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்பதே. ஆக இந்த இரண்டு தரப்பு மாணவர்களும் தாராளமாக அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை ஜாலான் ஈப்போவில் அமைந்துள்ள ம.இ.கா இளைஞர் பிரிவின் தலைமையகத்தில் காலை 10மணிக்கு தொடகுகிறது.
ம.இ.கா இளைஞர் பிரிவினர் இதன் மூலம் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களை தரம் பார்த்து, உயர்கல்வி அமைச்சகத்திடம் சமர்பிப்பர். ஒரு நாள் மட்டுமே நடத்தப்படும் இந்த சந்திப்பில் தவறாது வந்துக் கலந்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மாணவர்கள் உடன் எடுத்துவர வேண்டியவை
அடையாள அட்டை நகல், SPM முடிவு, STPM/MATRICULATION முடிவுகள், MUET முடிவுகள், புறப்பாட நடவடிக்கை, மறுவிண்ணப்பம் செய்த நகல். இதுமட்டுமே மாணவர்கள் கொண்டுவர வேண்டிய விசயங்களாகும். இவைகளை கொண்டு அடித்த கட்ட நடவடிக்கை செய்ய ம.இ.கா இளைஞ பிரிவினருக்கு பெறும் உதவியாக இருக்கும். இது குறித்து மேற்விபரங்களுக்கு 03-4043 1111 என்கிற எண்களில் ம.இ.கா இளைஞர் பிரிவினரை தொடர்புக் கொள்ளவும்.