MH370 பாகங்கள் மலேசியா கொண்டுவரப்படும்

MH370 பாகங்கள் மலேசியா கொண்டுவரப்படும்

images (1)

ஆகஸ்டு 13, கடந்த ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி காணாமல் போன MH370 விமானம் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370 மாயமானது. மாயமான மலேசிய விமானம் விபத்தில் சிக்கியது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் உள்ள லா ரீயூனியன் தீவில் விமான பாகம் ஒன்று கரை ஒதுங்கியது. கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் பாகங்கள் மலேசிய விமானத்தினுடையது என அந்நாட்டு பிரதமரும் உறுதிபடுத்தியுள்ளார்.

லா ரீயூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட பாகங்கள் MH370 விமானத்தினுடையதா என்பதை உறுதி செய்வதற்கு வேறு ஆய்வுகள் தேவைப்படுமானால் பாகங்கள் மலேசியாவுக்கு கொண்டுவரப்படும் என போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஶ்ரீ லியாவ் தியோங் லாய் தெரிவித்தார்.