கோலாலம்பூர், 26 அக்டோபர் 2026 : தேசிய அளவிலான இளம் அறிவியல் ஆய்வாளர் விழா 2026 போட்டியில், செயின்ட் திரேசா கான்வென்ட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஐந்தாவது இடத்தைப் பிடித்து வெள்ளி விருதை வென்றுள்ளனர். இப்போட்டியில் 5ஆம் வகுப்பு பாரதி வகுப்பைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் இணைந்து பங்கேற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள்:
- தமிழின்பன் தேவேந்திரன்
- ஹேமாஸ்ரீ காளிஸ்வரன்
- விரேஷ்லக்ஷ்மன் சரவணன்
- பிரசாந்தினி பிரசாத்
- இராஜேந்திர வர்மன் ரத்னவேல்
மாணவர்களின் இந்தச் சாதனைக்குப் பள்ளி தரப்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து, வழிகாட்டி, வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவிலான போட்டியில் மாணவர்கள் பெற்ற இந்த அங்கீகாரம், அவர்களின் அறிவியல் ஆர்வத்தையும் குழுவாகச் செயல்படும் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.







