என் தமிழ்

பிரெஞ்சு ஓபன் 2026 : மலேசியாவின் பேர்லி டான் – தினா ஜோடிக்குச் வெள்ளிப் பதக்கம்

பாரிஸ், 26 அக்டோபர் 2026 : பிரெஞ்சு ஓபன் 2026 பூப்பந்து போட்டியின் மகளிர் இரட்டையர் இறுதிப்போட்டியில் மலேசியாவின் பேர்லி டான் – எம். தினா ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது.

இறுதிப்போட்டியில் ஜப்பானின் நடப்புச் சாம்பியன்களான யூகி ஃபுகுஷிமா – மாயு மட்சுமோட்டோ ஜோடியை எதிர்கொண்ட மலேசிய இணை, 10-21, 21-17, 21-16 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. ஒரு மணி நேரம் நான்கு நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில், முதல் ஆட்டத்தை இழந்த மலேசிய ஜோடி அடுத்த இரண்டு ஆட்டங்களிலும் கடுமையாகப் போராடியது. இருப்பினும், ஜப்பான் ஜோடி வெற்றியைத் தட்டிச் சென்றது.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிரெஞ்சு ஓபன் மேடையில் பதக்கம் வென்றுள்ள பேர்லி டான் – தினா ஜோடி, மலேசியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளது. சாம்பியன் பட்டத்தைத் தவறவிட்டாலும், இறுதிப்போட்டி வரை முன்னேறி வெள்ளிப் பதக்கம் வென்ற இருவருக்கும் மலேசிய ரசிகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Scroll to Top