என் தமிழ்

நேபாளம்–இந்தியா மின்சார வர்த்தகம் : ரூ.327 கோடி மதிப்பிலான மின்சாரத்தை இந்தியாவுக்கு வழங்கிய நேபாளம்

புதுடெல்லி, 26 அக்டோபர் 2026 : நேபாளத்தில் வெள்ளப்பெருக்கால் பல நீர்மின் நிலையங்கள் சேதமடைந்தபோதிலும், கடந்த செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதி வரையிலான ஒரு மாதத்தில் இந்தியாவுக்கு ரூ.327 கோடி மதிப்பிலான மின்சாரத்தை நேபாளம் ஏற்றுமதி செய்துள்ளது.

இதுகுறித்து நேபாள மின்சார வாரியத்தின் நிர்வாக இயக்குநர் தீர்காயு குமார் ஸ்ரேஸ்தா தெரிவிக்கையில், குறிப்பிட்ட காலகட்டத்தில் இந்தியாவுக்கு 63.39 கோடி யூனிட் மின்சாரம் வழங்கப்பட்டதாகக் கூறினார். இதன் மூலம் நேபாள நாட்டு நாணய மதிப்பில் 5.925 பில்லியன் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

இந்த மின்சாரத்தில் பெரும்பகுதி இந்தியா – நேபாளம் இடையிலான இருதரப்பு மின்சார விற்பனை ஒப்பந்தங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல நீர்மின் நிலையங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டபோதிலும், இந்தியாவுக்கான மின்சார ஏற்றுமதியை நேபாளம் தொடர்ந்து மேற்கொண்டுள்ளது. நேபாளத்தின் மின்சார வர்த்தகத்தில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. மழைக்காலத்தில் நீர்மின் உற்பத்தி அதிகரிக்கும்போது, உள்நாட்டுத் தேவைக்குப் போகும் உபரி மின்சாரத்தை நேபாளம் இந்தியாவுக்கு விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Scroll to Top