ஏமன் சண்டையில் 94பேர் பலி

ஏமன் சண்டையில் 94பேர் பலி

Yemen
ஆகஸ்டு 5, ஏமன் சண்டையில் கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த அல்-அனாத் விமானதளத்தை அரசு ஆதரவுப் படையினர் கைப்பற்றினார். ஏமனின் மிகப் பெரிய விமானதளமான அல்-அனாத் விமானதளத்தை அரசு படைகளிடம் இழந்தது, கிளர்ச்சியாளர்களுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய பின்னடைவு என்று கருதப்படுகிறது. 24 மணி நேரம் நடந்த கடும் சண்டையில் 70 கிளர்ச்சியாளர்களும், 24 அரசு ஆதரவு படையினரும் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.