அமெரிக்கா, 25 அக்டோபர் 2026 : மலேசிய ஸ்குவாஷ் வீராங்கனை சிவசங்கரி சுப்பிரமணியம், அமெரிக்காவில் நடைபெற்ற சிலிக்கான் வேலி ஓபன் 2026 ஸ்குவாஷ் போட்டியில் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இறுதிப்போட்டியில் எகிப்து வீராங்கனை ஃபரிதா முகமதுவை எதிர்கொண்ட சிவசங்கரி, 11-7, 11-6, 11-8 என்ற புள்ளிக் கணக்கில் தொடர்ந்து மூன்று ஆட்டங்களையும் கைப்பற்றி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 31 நிமிடங்களில் போட்டியை முடித்து தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தினார்.
இந்த வெற்றியின் மூலம், நடப்பு பருவத்தில் தனது முதல் தொழில்முறை ஸ்குவாஷ் சங்க (PSA) பட்டத்தையும், சிலிக்கான் வேலி ஓபன் போட்டியில் தனது முதல் பட்டத்தையும் சிவசங்கரி வென்றுள்ளார். மலேசியாவுக்குப் பெருமை சேர்த்துள்ள சிவசங்கரியின் இந்த வெற்றி, சர்வதேச ஸ்குவாஷ் அரங்கில் அவரது திறமையையும் போட்டித் திறனையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.







