என் தமிழ்

அப்துல் கலாமின் மறைவிற்கு பான் கி மூன் இரங்கல்

apj12

ஆகஸ்டு 1, மறைந்த இந்தியா முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவிற்கு ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் இரங்கல் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் உள்ள இந்தியன் மிஷனிற்கு வந்த அவர் அப்துல் கலாம் உலகிற்கு ஒரு உத்வேகம் எனக் குறிப்பிட்டார். ஜனாதிபதியாக இருந்த போதும் சரி, அதற்கு பின்பும் அவர் உத்வேகத்தின் மொத்த உருவாக இருந்ததால் அவரது மறைவு தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்த சிறந்த மனிதரை இழந்து தவிக்கும் இந்திய மக்களுக்கு ஐ.நா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

Scroll to Top