என் தமிழ்

மலாயாப் பல்கலைக்கழகத்தில் ‘ஞானவெள்ளம்’ இலக்கிய நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன்

26 ஜூலை 2026 : மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற “ஞானவெள்ளம்” இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்ச்சியை டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தலைமையேற்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

கலைமாமணி பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் வழங்கிய இலக்கியப் பேருரை இடம்பெற்ற இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன், சமூகத்தில் நல்ல சிந்தனைகளையும் தெளிவான எண்ணங்களையும் உருவாக்குவதற்கு இதுபோன்ற இலக்கிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.

இலக்கியம் மனிதனின் சிந்தனையை வளப்படுத்துவதோடு, சமூக விழிப்புணர்வையும் உயர்த்தும் சக்தி கொண்டது என்றும், இளம் தலைமுறையினரிடையே தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களை வளர்க்க இதுபோன்ற நிகழ்வுகள் முக்கிய பங்காற்றுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் இலக்கிய ஆர்வலர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு, பேராசிரியர் கு. ஞானசம்பந்தனின் உரையை ஆர்வமுடன் கேட்டு பயனடைந்தனர்.

Scroll to Top