விதார்த் திருமணம் ஜூன் 11ம் தேதி

விதார்த் திருமணம் ஜூன் 11ம் தேதி

Vidharth

மே 8, ‘மைனா’, ‘முதல் இடம்’, ‘ஜன்னல் ஓரம்’, ‘வீரம்’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர், விதார்த். அவருக்கும், பழநியைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கும் ஜூன் 11ம் தேதி திருப்பதியில் திருமணம் நடக்கிறது. இதுபற்றி விதார்த் கூறும்போது, ‘காயத்ரி கிரிமினாலஜியில் பி.எச்.டி முடித்துள்ளார். இப்போது வழக்கறிஞருக்குப் படிக்கிறார். இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் ஜூன் 11ம் தேதி திருமணம் நடக்கிறது. 17ம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.