மே 8, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 64 ஆக சரிந்துள்ளது. கடந்த 20 மாதங்களில் இப்படி பெரும் சரிவை கண்டது இதுவே முதன்முறை. நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு ஓரளவு சரிந்திருந்தது. அதாவது, ஒரு டாலருக்கு எதிராக ரூபாய் நிலை 63.54 என்றிருந்தது. நேற்று 71 பைசா அதிகரித்து மேலும் மதிப்பு சரிந்து 64.23 ஆக உள்ளது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிய காரணம், முதலீட்டாளர்கள் செயல்பாடு தான். கடந்த சில மாதங்களாக வெளிநாட்டு நிறுவனங்கள் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு ரூபாய் பங்குகளை விற்றுள்ளன. இதுதவிர, எண்ணெய் கம்பெனிகள் ரூபாய்க்கு பதிலாக டாலரை வாங்கி வர்த்தகம் செய்வதால் ரூபாய் மதிப்பு பலவீனமாகி விட்டது.
Previous Post: பெர்மாத்தாங் பாவு இடைத்தேர்தல் தொடங்கியது
Next Post: விதார்த் திருமணம் ஜூன் 11ம் தேதி