ஏப்ரல் 27, கடந்த 4மாதகாலமாக எஸிபி எனப்படும் சரவாக் என்ர்ஜி பெர்ஹாட் பயனீட்டாளர்களிடம் மின்கட்டண பில் வழங்கவில்லை என்று சரவாக் சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுவரை விதிக்கப்படாமலிருக்கும் மின்கட்டணம் எதிர்காலத்தில் ஒரே நேரத்தில் விதிக்கப்படலாம் என்று பயனீட்டாளர்கள் அஞ்சுகின்றனர். நான்கு மாதங்களுக்கு முன்பு விதிக்கப்பட்ட புதிய மின்கட்டணத்தை அமல்படுத்துவதில் எஸிபிக்கு ஏற்பட்டுள்ள சில சிரமங்களே மின்கட்டண பில் வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள சிரமத்திற்க்கு காரணம் என்று நம்பப்படிகிறது.