ஆண், பெண் உறுப்புகளுடன் பிறந்த அதிசய குழந்தை

ஆண், பெண் உறுப்புகளுடன் பிறந்த அதிசய குழந்தை

infant

ஏப்ரல் 22, தர்மபுரி அருகே ஆண், பெண் இன உறுப்புகளுடன் பிறந்த குழந்தை, தொட்டில் மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. தர்மபுரி அருகே பென்னாகரம்பகுதியை சேர்ந்த தம்பதிக்கு, கடந்த ஒரு மாதத்திற்கு முன் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆண் மற்றும் பெண் இன உறுப்புகள் இருந்ததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து,நேற்று முன்தினம் தர்மபுரி தொட்டில் குழந்தை மையத்தில் அந்த குழந்தையை ஒப்படைத்தனர். இந்த குழந்தை ஆண் குழந்தைதான். ஹார்மோன் குறைபாடு காரணமாக விதைப்பை உள்ளடங்கிஉள்ளது. இதனால் பெண் உறுப்பும் உள்ளதாக தெரிகிறது. இவ்வாறுடாக்டர் இளங்கோவன் கூறினார்.