ஏப்ரல் 15, வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்த பிரியாணி படத்தில் நடித்தவர் ஹானி. இவர் அஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்திலும் சிறு கேரக்டரில் வந்துள்ளார். நிறைய மலேசிய படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இந்நிலையில் ஹானி புற்றுநோய்க்கு கடந்த சில மாதங்கள் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணம் அடைந்தார். ஹானி மறைவுக்கு டைரக்டர் வெங்கட்பிரபு அனுதாப செய்தி வெளியிட்டுள்ளார்.