மார்ச் 20, கலசப்பாக்கம் அருகே நான்கு கால்களும் இல்லாமல் பிறந்த அதிசய கன்றுக் குட்டியை கிராம மக்கள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.கலசப்பாக்கத்தை அடுத்த கீழ் வன்னியனூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் வளர்த்து வந்த பசு ஒன்று செவ்வாய்கிழமை அன்று கன்று ஈன்றது. அந்த கன்றுக்குட்டிக்கு நான்கு கால்களும் இல்லாமல் இருந்தாலும் ஆரோக்கியமாக இருந்தது.