மார்ச் 19, இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் ஐந்தாண்டுகள் சிறைதண்டனை அனுபவித்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றக் கூட்டத்திற்கு வருகைப் புரிவதற்குத் தடை விதிக்கப்பட்டது.
நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக தாம் முன்வைத்த விண்ணப்பத்தை நிராகரித்த உள்துறை அமைச்சர் மற்றும் சிறை இலாகா இயக்குனர் ஆகியோர் மீது அன்வார் நீதிமன்ற ஆய்வுக்கு மனு செய்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் ஐந்தாண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.