30000 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

30000 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

swine

மார்ச் 18, இந்தியா முழுவதும் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு இதுவரை 1,731 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 30,000 பேருக்கு இந்த நோய் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் கூறியது: நடப்பாண்டில் கடந்த ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து, கடந்த 15ஆம் தேதி வரை பன்றிக் காய்ச்சல் நோயால் 1,731 பேர் பலியாகினர். நாடு முழுவதும், இதன் பாதிப்பு 29,938 பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.