ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம்

ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம்

amer

மார்ச் 18, ஸ்டாக்ஹோம் என்ற பன்னாட்டு அமைதி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் புதிய புள்ளி விவரங்களின் படி, உலக அளவில் ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை இறக்குமதி செய்வதில், இந்தியா முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2005 – 2009 ஆண்டுகளை ஒப்பிடும் போது 2010-14 இல் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 140 சதவீதமாக உயர்ந்திருப்பதாகவும், சீனா மற்றும் பாகிஸ்தானின் ஆயுத இறக்குமதியுடன் ஒப்பிடுகையில் இந்தியா 3 மடங்கு அதிகமாக ஆயுத இறக்குமதி செய்திருப்பதாகவும் இந்த சர்வதேச ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.