மார்ச் 12, MH370 விமானம் காணாமல் போய் 1 வருடம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து. கடந்தாண்டு மட்டும் MH370 விமானத்தின் தேடல்பணிகளுக்காக 79 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது.
மலேசிய அரசாங்கம் 79,031,905.76 ரிங்கிட்டை MH370 விமானத்தின் தேடல் பணிகளுக்காகப் பயன்படுத்தியுள்ளதாக மக்களவையில் டத்தோ சாஹிடி சைனுல் அபிடின் எழுப்பியக் கேள்விக்கு போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஶ்ரீ லியாவ் தியோங் லாய் குறிப்பிட்டுள்ளார்.
ஒட்டுமொத்த செலவு இன்னமும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் டத்தோ ஶ்ரீ லியாவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார்.