28 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிமனிதன் தாடை எலும்பு கண்டுபிடிப்பு

28 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிமனிதன் தாடை எலும்பு கண்டுபிடிப்பு

92-299x300

மார்ச் 12, எத்தியோப்பியாவில் கண்டெடுக்கப்பட்டிருக்கும் ஆதிமனிதனின் கீழ்த்தாடை என்று கருதப்படும் புதைபொருள், ஆதிமனிதன் இந்த பூமியில் தோன்றிய காலகட்டத்தை நான்குலட்சம் ஆண்டுகள் முன்நகர்த்தியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை அகழ்வாராய்ச்சியாளர்களுக்கு கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் ஆதிமனிதர்கள் சுமார் 24 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றினார்கள் என்று கணக்கிட்டு வந்தார்கள். ஆனால் தற்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் தாடை எலும்பு இக்கணக்கை தற்போது நான்கு லட்சம் ஆண்டுகள் முன்னுக்குத் தள்ளியிருக்கிறது. அதாவது இந்த புதிய தாடை எலும்பின் அடிப்படையில் கணக்கிடும்போது, மனித இனம் சுமார் 28 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியிருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.