மது விற்பனையில் திருப்பதி முதலிடம்

மது விற்பனையில் திருப்பதி முதலிடம்

tir1

பிப்ரவரி 26, புனித நகரமாக கருதப்படும் திருப்பதி, சித்தூர் மாவட்டத்தில் மது விற்பனையில் முதலிடமாக உள்ளது என கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 415 மதுக்கடைகள் மற்றும் பார்கள் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு சித்தூர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்து 188  கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதில் சித்தூர் மாவட்டத்தில் முதலிடம் வகிப்பது புனித நகரமான திருப்பதி.அங்கு கடந்த 2014ம் ஆண்டு ரூ.192 கோடிக்கு விற்பனையானது. ஸ்ரீகாளஹஸ்தியில்  2013ம் ஆண்டு ரூ.104 கோடிக்கு விற்பனையானது. 2014ம் ஆண்டு ரூ.103 கோடிக்கு விற்பனையானது.