76.85 அடியாக சரிந்தது மேட்டூர் அணை நீர்மட்டம்

76.85 அடியாக சரிந்தது மேட்டூர் அணை நீர்மட்டம்

MULLAPERIYAR_955631f

பிப்ரவரி 21, குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76.85 அடியாக குறைந்துள்ளது. காவிரி நீர்பிடிப்புபகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாகவே இருந்து வருகிறது. அணைக்கு வினாடிக்கு 122 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது.ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 2000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.நேற்று முன்தினம் 76.94 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று 76.85 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 38.88 டிஎம்சி.